கொரோனாவிலிருந்து மீண்ட "கடவுளின் தேசம் கேரளா"!

கொரோனா வைரஸ் அதிக அளவில் தற்போது பரவிவரும் நிலையில் இந்தியாவிலும் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் முதன்முதலில் கொரோனா உள்ள மாநிலமாக கடவுளின் தேசமென்று அழைக்கப்படும் கேரளா தான் இருந்தது. அங்கு முதன்முதலில் 20 வயதுஇளம் பெண் தான் முதல் கொரோனா பாதிப்பு கொண்டவராக கண்டறியப்பட்டவராக கருதப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து ஒரு குடும்பத்தில் உள்ள ஐந்து பேருக்கும் கொரோனா பாதிப்பு இருந்ததாக கூறப்பட்டது. அதிக அளவு கொரோனா அங்கு பரவி வந்த நிலையில், தற்போது 214 பேர் ஒரே நாளில் இருந்து குணமாகி உள்ளனராம். உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு.
அதுமட்டுமல்லாமல் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இதிலிருந்து தப்பித்து விட்டனர் என்பது கேரள அரசுக்கு மிகப் பெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது. முதன்முதலில் கேரளாவில் கண்டறியப்பட்டாலும், கொரோனா இல்லாத மாநிலமாக கேரளா விரைவில் மாறும் என கேரள அரசு நம்பிக்கை தெரிவித்து உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025