#KFON : சொந்தமாக இணைய சேவையை கொண்ட முதல் மாநிலமானது கேரளா

Default Image

சொந்தமாக இணைய சேவையை கொண்ட முதல் மாநிலமாக மாறிய கேரளா.

நாட்டிலேயே சொந்தமாக இணைய சேவையை கொண்ட முதல் மற்றும் ஒரே மாநிலமாக கேரளா மாறியுள்ளது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இதற்கான ISP உரிமத்தை,  கேரளா ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் லிமிடெட் @DoT_India லிருந்து பெற்றுள்ளது.இதற்கு KFON என பெயரிடப்பட்டுள்ளது.

இது பற்றி முதல்வர் பினராயி விஜயன் தெரிவிக்கையில்  நமது மக்களுக்கு அடிப்படை உரிமையாக இணையத்தை வழங்க அதன் செயல்பாடுகளை கிக்ஸ்டார்ட் செய்ய முடியும்” என்று  ட்வீட் செய்துள்ளார்.

KFON திட்டத்தின் மூலம் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்கள் மற்றும் 30,000 அரசு அலுவலகங்களுக்கு இலவச இணையத்தை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.இதன் மூலம், சமூகத்தில் டிஜிட்டல் இடைவெளியை குறைக்கும் திட்டமாக அமையும் என்று முதல்வர் கூறினார்.

2019 இல் இணைய இணைப்பை அடிப்படை உரிமையாக அறிவித்து ரூ.1,548 கோடியில் KFON திட்டத்தை இடதுசாரி அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்