கேரளாவில் மருத்துவர்களின் பரிந்துரைப்படி மது வழங்கும் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்தது நீதிமன்றம்.!
கொரோனா தொற்று அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுபான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கேரளா மாநிலத்திலும் இதே நிலைதான் என்றாலும், அங்கு மதுவிற்கு அடிமையானவர்கள் மதுவின்றி தற்கொலை செய்துகொள்ளும் அவலம் அதிகமாக அரங்கேறியது.
இதன் காரணமாக மதுவுக்கு அடிமையானவர்கள் குறிப்பிட்ட அளவு மதுவை மருத்துவர்களின் பரிந்துரை படி மது வாங்கிக்கொள்ளலாம் என கேரள அரசு அறிவித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று கேரள மருத்துவர்கள் கருப்பு துணி அணிந்துகொண்டு கருப்பு தினமாக அனுசரித்தனர்.
இந்நிலையில், கேரள அரசின் இந்த முடிவுக்கு எதிராக கேரள உயர்நீதிமன்றமானது, கேரள அரசின் இந்த முடிவுக்கு 3 வாரத்திற்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.