தேசத்துரோக வழக்கில் ஆயிஷாவுக்கு முன்ஜாமீன் வழங்கியது கேரள ஹைகோர்ட்!
நடிகை ஆயிஷாவுக்கு தேசத்துரோக வழக்கில் இருந்து கேரள ஹைகோர்ட் முன் ஜமீன் வழங்கியுள்ளது.
தயாரிப்பாளரும் நடிகையுமாகிய ஆயிஷா சுல்தான் டிவி நிகழ்ச்சியில் பேசும்போது கொரோனா பரவுவதற்கு லட்சத்தீவில் மத்திய அரசு உயிரி ஆயுதத்தை பயன்படுத்துவதாக கூறியுள்ளார். இந்த பேச்சு லட்சத்தை நிர்வாக அதிகாரிகளுக்கு எதிராக இருந்ததாக சர்ச்சை கிளம்பியது. இதனையடுத்து பாஜக தலைவர் அமித் ஷா நடிகை ஆயிஷா மீது அளித்த புகாரின் அடிப்படையில், அவர் மீது போலீசார் தேசத்துரோக வழக்குப் பதிவு செய்துள்ளனர். எனவே ஆயிஷா முன் ஜாமீன் கேட்டு கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் ஆயிஷாவுக்கு ஒரு வாரத்திற்கான இடைக்கால முன்ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி இலட்சத் தீவில் நடைபெற்ற போலீஸ் விசாரணையில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை ஆயிஷா அளித்துள்ளார். இதனையடுத்து ஆயிஷாவின் முன் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றுள்ளது. ஆயிஷா தரப்பு வாதம் மற்றும் விளக்கத்தை ஏற்ற நீதிபதிகள் அடுத்த போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியதுடன் அவருக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.