கேரளாவில் வரும் 31-ம் தேதி வரை போராட்டம் நடத்த தடை.. கேரள உயர் நீதிமன்றம் அதிரடி.
கேரளாவில் கடந்த 2 மாதங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால், கேரள அரசு கொரோனாவை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஆனால், அங்கு கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட விதிகளை மீறி போராட்டங்கள் நடைபெற்று வருவதாக கேரள உயர் நீதிமன்றத்தில் குற்றசாட்டு எழுந்து வந்தது. இதனால், கேரள உயர் நீதிமன்றம் கேரளாவில் பொது இடங்களில் கடந்த ஜூலை 15-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரை போராட்டம் நடத்த தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், வருகின்ற ஆகஸ்ட 31-ஆம் தேதி வரை போராட்டங்கள் நடத்த தடை நீட்டித்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.