கேரளாவில் கொடிய கொரோனா பாதிப்பிலிருந்து இன்று ஒரே நாளில் 9 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்…
இந்தியா முழுவதும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட சூழலில் தற்போது ஒவ்வொரு மநிலமாக மீண்டுவருகிறது. இந்நிலையில், கேரள மாநிலத்தில் கொரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்டிருந்த 9 பேர் ஒரே நாளில் குணமடைந்ததாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தற்போது வரை 497 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 392 பேர் குணமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றால் மருத்துவமனையில் தற்போது வரை 102 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், தற்போது புதிதாக மேலும் 10 இடங்களில் நோய் தீவிரம் அதிகமாக உள்ள பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தின் நோய் தீவிரம் உள்ள பகுதிகளின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளதாகவும் அந்த குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.