5 கல்லூரி மாணவர்களை சமூக சேவை செய்ய கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவு ..!

Default Image

ஜூனியர்களை ராகிங் செய்ததாக  செய்ததற்காக குற்றம் சாட்டப்பட்ட 5 பொறியியல் மாணவர்களை  விடுவித்து கொல்லம் பொது மருத்துவமனையில் 2 வார காலத்திற்கு சமூக சேவை செய்ய கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தங்களுக்கு எதிரான ராகிங் வழக்கை ரத்து செய்யக்கோரி, கொல்லம் டி.கே.எம் பொறியியல் கல்லூரி மாணவர்களான எம்.எஸ்.ஹரிகிருஷ்ணன், எம்.சாஹல்முகமது, அபிஷேக் அனந்தராமன், நபன் அனிஷ், அஸ்வின் மனோகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்தது.

கொல்லம் பொது மருத்துவமனையில்  இரண்டு வாரங்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 8 மணி நேரம் சேவை செய்ய வேண்டும். சமூக சேவையை திருப்திகரமாக முடித்ததற்காக  வழங்கப்படும் சான்றிதழை சமர்பித்த பின்னரே, விடுதலையானது நடைமுறைக்கு வரும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்