கேரளா முதலிடம்.! தமிழகத்திற்கு..? எத்தனை கோடி பேர் பாஸ்போர்ட் வைத்துள்ளார்கள் தெரியுமா.?
அதிக எண்ணிக்கையில் பாஸ்போர்ட் வைத்திருக்கும் மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் இருக்கிறது.
தற்போது வெளிநாடு சென்று வேலை பார்க்கும் ஆர்வமும், வெளியூர் சுற்றுலா செல்லும் ஆர்வமும் அதிகமாகி வருவதால் பாஸ்போர்ட் எடுக்கும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டு இருக்கிறது. இதற்கு வசதியாக பாஸ்போர்ட் ஆவணங்கள் சரிபார்க்கும் மையங்களும் அதிகரித்து உள்ளன.
தற்போது பாஸ்போர்ட் பெற்றவர்கள் எண்ணிக்கையை மத்திய அரசு மாநில அளவிலான எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், அதில், அதிக எண்ணிக்கையில், கேரளா 1.12 கோடி நபர்களை தாண்டி முதலிடத்தில் உள்ளது.
இரண்டாம் இடத்தில் 1.04 கோடி நபர்களை தாண்டி இரண்டாம் இடத்தில் உள்ளது. 97 லட்சம் பேர்களை தாண்டி தமிழகம் அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறது. இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக சுமார் 9.5 கோடி பேர் பாஸ்போர்ட் வைத்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.