கேரளாவில் கட்டுக்கடங்காமல் செல்லும் கொரோனா இரவு நேர ஊரடங்கு அமல்
கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக திங்கள்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு உத்தரவானது இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என்று கேரளா அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பான முடிவு நேற்று மாலை தலைமைச் செயலாளர் டாக்டர் வி பி ஜாய் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
நேற்று ஒரு நாளில் மட்டும் 13,644 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது ஒரே நாளில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.4,305 குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1,03,004 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில், கேரளாவுக்கு வருகை தரும் அனைத்து உள்நாட்டு பயணிகளும் வருகைக்கு முன்னும் பின்னும் 48 மணி நேரத்திற்குள் ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேரளா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.