‘குடியுரிமை திருத்த சட்டம் சட்டவிரோதம்!’ – உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு கோரிக்கை!

- குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
- இந்த சட்டதிருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு சார்பாக வழக்கு தாக்கல் செய்ய பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த சட்டதிருத்தை அமல்படுத்த மாட்டோம் என மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்தன.
தற்போது கேரள மாநில அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இந்த வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த மனுவில் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என அதில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.