கேரளாவில் பேருந்து போக்குவரத்தில் முதற்கட்டமாக மாவட்டத்திற்குள் மட்டும், பேருந்து போக்குவரத்து இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடுமுழுவதும் மத்திய மாநில அரசுகள் நான்காம் கட்ட ஊரடங்கை அமல்படுத்தின.மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தின் கொரோனா நிலவரம் பொறுத்து பேருந்து போக்குவரத்தை இயக்கி கொள்ளலாம் என மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியிருந்தது.
அதன்படி, கொரோனாவில் இருந்து மீண்டு வரும் கேரளாவில் பேருந்து போக்குவரத்து முதற்கட்டமாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் மாவட்டத்திற்குள் மட்டும், பேருந்து போக்குவரத்து இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
பேருந்துகள் மாவட்ட எல்லைகளை கடக்க அனுமதி இல்லை. கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி இல்லை. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரையில் மட்டுமே பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி. பேருந்தில் 50 சதவீத பயணிகளுக்கு மட்டுமே அனுமதி என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும், படகு போக்குவரத்திற்கும் அனுமதியளித்துள்ள கேரள அரசு படகு கட்டணத்தை கொரோனா காலத்திற்கு மட்டும் 33 சதவீதம் அளவுக்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளது. ஆட்டோ, டாக்சியில் ஒரே ஒரு பயணி மட்டும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…