கொரோனாவை எதிர்கொள்ள கேரள அரசு அறிவித்த ரூ.20,000 கோடி நிதி..!

Default Image

கேரளாவில் கொரோனவை எதிர்கொள்ள அரசு 20,000 கோடி ரூபாய் நிதி தொகுப்பை தற்போது அறிவித்துள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற கேரள சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடதுசாரி ஜனநாயக முன்னணி. இரண்டாவது முறையாக கேரள முதல்வராக பொறுப்பேற்ற பினராயி விஜயன் கேரளாவில் கொரோனா தடுப்பு பணிகளை மும்முரமாக செய்து வருகிறார். இதை தொடர்ந்து கேரளவில் சட்டசபை கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் ஆரம்பமானது.

அதன்படி, இன்று காலை சட்டமன்றம் கூடியது. இதில் புதிய அரசின் பட்ஜெட் தொகை தாக்கல் செய்யப்பட்டது. இதை தற்போதைய கேரள அரசின் நிதி அமைச்சர் பாலகோபால் தாக்கல் செய்துள்ளார்.  அப்போது பேசிய நிதி அமைச்சர், கொரோனா முதல் அலையின் தொடக்கத்தில் ரூ.20,000 கோடி நிதி அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை அடுத்து தற்போது கொரோனா இரண்டாம் அலை கடுமையாக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை எதிர்கொள்ள ரூ.20,000 கோடி நிதி தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியில் ரூ.2,800 கோடியை சுகாதார அவசர தேவைகளுக்கும், ரூ.8,900 கோடியை மக்களுக்கு நேரடியாக வழங்குவதற்கும், ரூ.8,300 கோடியை வட்டி மானியங்கள் மற்றும் கடன்கள் ஆகியவற்றை சரி செய்யும் பொருட்டும் இந்த நிதியை ஒதுக்கியுள்ளனர்.  மேலும், ரூ.1,000 கோடியை 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வாங்குவதற்கும், ரூ.500 கோடியை கொரோனா தடுப்பூசி உபகரணங்களுக்காகவும் ஒதுக்கியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்