கொரோனா வைரஸ் தாக்கத்தால் பேருந்துகள் முடங்கியிருந்த நிலையில், கேரள அரசாங்கம் பேருந்து கட்டணத்தை 25 சதவீதம் உயர்த்தி உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தால் அனைத்து துறைகளும் முடக்கப்பட்ட நிலையில் உள்ளன. இந்நிலையில் போக்குவரத்துத் துறைகள் அனைத்தும் சில மாதங்களாக முற்றிலும் முடங்கி இந்த நிலையில், தற்போது தான் சில தளர்வுகள் காரணமாக ஆங்காங்கே இயக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. இந்நிலையில், போக்குவரத்து துறை எதிர்கொள்ளக் கூடிய பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக கேரள மாநிலத்தில் நீதித்துறை ஆணையம் ஒரு பரிந்துரையை வழங்கியுள்ளது.
அதன்படி இதுவரை குறைந்தபட்ச தூரமாக இருந்த ஐந்து கிலோமீட்டருக்கு பதிலாக தற்பொழுது இரண்டரை கிலோ மீட்டராக கட்டணம் கணக்கிடப்படும் என கூறப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் எட்டு ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 10 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு கட்டணங்களை எதுவும் மாற்றம் செய்ய வேண்டாம் எனவும் முடிவு செய்துள்ளனராம்.
அதன்படி கட்டணத்தை அதிகரிக்காமல் தூரத்தை குறைத்து அதே அளவு கட்டணத்துடன் இரண்டு ரூபாய் கூட்டி தற்பொழுது பேருந்து இயக்கப்பட உள்ளது. அதன் படி 25 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டு, தூரங்கள் குறைக்கப்பட்டுள்ளது. கேரள அரசாங்கம் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடி இருப்பதை கருத்தில் கொண்டே இவ்வாறு செய்துள்ளது. இதுபோல கேரளாவில் உள்ள தனியார் போக்குவரத்து துறை பேருந்துகளும் நெருக்கடியை சந்திப்பதாகக் கூறி கட்டணம் உயர்த்த வேண்டும் என கோரி வருகின்றனர்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…