சோமாடோவுடன் இணைந்து ஆன்லைன் மூலம் ரேஷன் பொருட்களை விநியோகம் செய்ய கேரள அரசு முடிவு.!

Default Image

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 724 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு (144தடை) அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து மற்ற அனைவரும் வீட்டை விட்ட வெளியே வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல ஸ்விக்கி, சோமாடோ உள்ளிட்ட ஆன்லைன் உணவு விநியோகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களான ரேஷன் பொருட்களை சோமாடோ நிறுவன ஊழியர்கள் மூலம் வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்ய அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது. முதலில் எர்ணாகுளம் பகுதியில் உள்ள மக்களுக்கு நேரடியாக ரேஷன் பொருட்களை வழங்க உள்ளது என்றும் மக்கள் தேவைப்படும் பொருட்களை ஆன்லைனில் பதிவு செய்தால், அதனை சோமாடோ ஊழியர்கள் நேரடியாக வீட்டிற்கு வந்து வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக, சப்ளைக்கோ ஆன்லைன் விநியோகத்திற்காக சோமாடோவுடன் இணைந்துள்ளனர். 

ஒரு நபர் ஆன்லைனில் சப்ளைக்கோ கடைகளில் இருந்து அதிகபட்சம் 12 கிலோ வரை ஆர்டர் செய்யலாம் என்றும் குறைந்தபட்ச ஆர்டர் மதிப்பு ரூ.300 ஆக இருக்க வேண்டும். டெலிவரி பயன்பாடுகளுக்கான சேவை கட்டணமாக தூரத்தின் அடிப்படையில் அவர்கள் ரூ.50 முதல் ரூ.60 வரை செலுத்த வேண்டும் என்று சப்ளைக்கோ தலைவரும் நிர்வாக இயக்குநருமான பி.எம் அலி அஸ்கர் பாஷா தெரிவித்துள்ளார்.  இதனிடையே கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 137 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சம் கொரோனா பாதிப்பு உள்ள மாநிலமாக கேரளா தான் முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்