லட்சத்தீவில் புதிய சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து கேரளா அரசு உத்தரவு…!
லட்சத்தீவின் நிர்வாக அதிகாரி பிரஃ புல் படேல் கொண்டு வந்த சர்ச்சைக்குரிய புதிய சட்டங்களுக்கு இடைக்காலத்தடை விதித்து கேரளா அரசு உத்தரவிட்டுள்ளது.
சுற்றுலாவுக்கு பெயர் போன ஒரு இடம் லட்சத்தீவு. இந்த லட்சத்தீவில் மத்திய அரசின் சார்பில் நடைமுறைப்படுத்தப்படும் நடவடிக்கைகள் அங்கு வாழும் மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை சிதைத்து, அவர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. நாட்டின் மிகச் சிறிய யூனியன் பிரதேசமான லட்சத்தீவு தினேஷ்வர் சர்மா என்பவரால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு காலமானார்.
இதனையடுத்து, தாத்ரா நாகர் ஹவேலி மற்றும் டாமன் டையூ யூனியன் பிரதேசத்தின் நிர்வாக உள்ள பிரபுல் கோடா படேல் லட்சத்தீவின் பொறுப்பு நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். இவர் நிர்வாக பொறுப்பை ஏற்றுக் கொண்டது முதல், மக்களுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை இயற்றி வருகிறார்.
இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், லட்சத்தீவின் நிர்வாக அதிகாரி பிரஃ புல் படேல் கொண்டு வந்த சர்ச்சைக்குரிய புதிய சட்டங்களுக்கு இடைக்காலத்தடை விதித்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.