இந்திய வரலாற்றில் முதல்முறையாக காய்கறிகளுக்கு அரசே விலை நிர்ணயம்..அதிரடி
இந்தியாவிலேயே முதல்முறையாக காய்கறிகளுக்கு அரசே விலை நிர்ணயம் செய்யும் திட்டத்தை கேரல அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
நாட்டிலேயே முதன் முறையாக காய்கறிகளுக்கு அரசே விலை நிர்ணயம் செய்யும் திட்டத்தை கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
அதன்படி இனி கேரள விவசாயிகள் காய்கறிகளை உற்பத்தி செய்யும் விலையில் இருந்து 20% அதிகமான விலையை கணக்கிட்டு அந்த காய்கறிகளின் விலை
நிர்ணயம் செய்யப்படும் என்றும் நவ.,1ந்தேதி இத்திட்டம் கேரத்தில் அமல்படுத்தப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக இணையதளம் வாயிலாக இத்திட்டத்தை முதல்வர் பினராயி அறிமுகம் செய்து வைத்த இத்திட்டத்தில் கேரள மாநில விவசாயிகள் உற்பத்தி செய்யும் 16 வகை காய்கறிகளின் விலையே இந்திய வரலாற்றில் அரசே நிர்ணயம் செய்கிறது.
இதனால் காய்கறிகளின் விலையை அரசே நிர்ணயம் செய்யும் முதல் மாநிலம் கேரளாவாகும்.இத்திட்டத்தால் இடைதரர்களின்றி விவசாயிகள் உற்பத்திக்கான
முழு பலனை பெறுவார்கள்.
சந்தைகளில் காய்கறிகளின் விலை குறைந்தாலும் கூட கூடுதலான விலையிலேயே விவசாயிகளிடமிருந்து காய்கறிகள் கொள்முதல் செய்யப்படும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.காய்கறிகளை கொள்முதல் செய்யவும்,விற்பனை செய்யவும் உள்ளாட்சி அமைப்புகள் களமிரக்கப்பட்டுள்ளது.
என்றும் இத்திட்டத்தில் ஒரு பருவத்தில் 15 ஏக்கர்க்கும் அதிகமான காய்கறிகள் பயிரிடும் விவசாயிகளுக்கு இத்திட்டம் மிகுந்த பலனளிக்கும்.
இத்திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள் தங்கள் விளைவிக்கும் காய்கறிகள் இத்திட்டத்தின் பட்டியலில் இருக்கிறதா என வேளாண்மைத்துறை இணையத் தளத்தில் தெரிந்து கொண்டு நவ.,1ந்தேதி முன் பதிவு செய்யலாம் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் விவசாய துறையை மேம்படுத்த ஏரளமான முயற்சிகளை கேரள அரசு எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.