கேரளா பள்ளிகளுக்கு மார்ச் முழுவதும் விடுமுறை அளித்த அம்மாநில அரசு.!
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் இதுவரை 4,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,14,343 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் 60,000க்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் இதுவரை 56 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கேரளாவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானாவர்களின் எண்ணிக்கை 12 என்றும் 1,116 பேர் கண்காணிப்பில் உள்ளனர் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
வைரஸ் வேகமாக பரவிவருவதால் கேரளாவில் மார்ச் மாதம் முழுவதும் 1ஆம் வகுப்பு முதல் 7ஆம் வகுப்பு வரை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள், டியூசன் மையங்கள், அங்கன்வாடி மையங்கள், மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 8,9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என்றும் கண்காணிப்பில் இருக்கும் மாணவர்கள் தேர்வு எழுத சிறப்பு ஏற்பாடுகள் செய்துதரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.