வேகமாக பரவும் பறவைக்காய்ச்சல் ! மாநில பேரிடராக அறிவித்த கேரளா

கேரளாவில் பறவைக்காய்ச்சல் பல மாவட்டங்களுக்கு பரவிவரும் நிலையில், அதனை மாநில பேரிடராக கேரள அரசு அறிவித்துள்ளது .மேலும் நோய் கண்டறியப்பட்ட கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோட்டயம் மற்றும் ஆலப்புழா ஆகிய இரு மாவட்டங்களின் சில பகுதிகளில் இறந்த வாத்துகளின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டபோது மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வருவது கண்டறியப்பட்டது. இருப்பினும், இந்த நோய் மக்களுக்கு பரவவில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஒரு பண்ணையில் சுமார் 1,650 வாத்துகள் நோயால் இறந்த பின்னர் இந்த நோய் பரவல் உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என்பதால் பரவுவது குறைவு என்று கூறப்படுகிறது.தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மாவட்டத்தில் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட எட்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆலப்புழா பகுதிகளிலும் இந்த நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தலவடி, பல்லிபாட் மற்றும் தாசக்கார உள்ளிட்ட பகுதிகளில் பரவியுள்ளது.முதல்வருடன் கலந்தாலோசித்த பின்னர் விவசாயிகளுக்கான இழப்பீடு முடிவு செய்யப்படும் என்று கேரள அமைச்சர் கே.ராஜு தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
சோப்பை விளம்பரம் செய்ய ரூ.6.2 கோடி.., கர்நாடக அரசால் தமன்னாவுக்கு வலுக்கும் விமர்சனம்.!
May 22, 2025
LSG vs GT: ஒரே ஆளு.., மரண அடி அடித்த மிட்செல் மார்ஷ்! மிரண்டு போன குஜராத் அணிக்கு இது தான் இலக்கு.!
May 22, 2025