கேரள அரசு அதிரடி அறிவிப்பு.! வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு ஆன்லைனில் மருத்துவ ஆலோசனை.!

Default Image

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பில் முதலில் கேரள மாநிலம்தான் இருந்தது. தற்போது படிப்படியாக குறைந்து 5வது இடத்தில இருக்கிறது. கேரளாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 345 ஆகவும், உயிரிழப்பு 2 ஆகவும் உள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களில் 83 பேர் குணமடைந்துள்ளார்கள். இப்போது 259 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்றும் மாநிலம் முழுவதும், 1.40 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதில் 749 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிக்கும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள், கொரோனாவால் உயிரிழப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் வெளிநாடுகளில் வாழும் கேரள மக்களுக்கு, ஆன்லைன் மூலம் மருத்துவ உதவி வழங்க, ஐந்து மையங்கள் திறக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் இங்குள்ள மருத்துவர்கள் வெளிநாட்டில் உள்ள மலையாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை காணொலி காட்சி மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக https://norkaroots.org/web/guest என்ற இணையத்தை தினமும் பகல் 2:00 முதல் 6:00 மணி வரை இந்திய மேற்படி மருத்துவர்கள் ஆலோசனை வழங்குவார்கள் என கூறியுள்ளார். 

மேலும் கொரோனா சிகிச்சைக்காக ஆயுர்வேதத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். அது நல்ல பலன் அளிக்கும் என, சுகாதாரத் துறை அமைச்சரும் மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முன்னணியில் இருந்த கேரளா தற்போது, 5வது இடத்திற்குச் சென்றுள்ளது என்றும் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். இதற்கு கேரள அரசு மேற்கொள்ளும் அதிரடி நடவடிக்கைகளே காரணம் என பலர் பாராட்டியுள்ளனர். இந்த நிலையில் வெளிநாடுகளில் வாழும் கேரள மக்களுக்கு உதவ முன்வந்துள்ளதை அனைவரும் வரவேற்றுள்ளனர்.இதனை அணைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று கருது தெரிவித்து வருகின்றனர். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்