ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் இன்று என்ஐஏ விசாரணை.
கடந்த மாதம், திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் 30 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக தங்கராணி சொப்னா, சரித்குமார், சந்தீப் நாயர் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கு, இந்த கும்பல்களுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், என்ஐஏ அதிகாரிகள் இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரிடம் 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து, சுங்க இலாகா அதிகாரிகளும், சிவசங்கரிடம் 9 மணி நேரம் விசாரித்தனர். இந்த 2 விசாரணையின் போதும் சிவசங்கர் கூறிய பதில்களில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, இன்று கொச்சியில் என்ஐஏ விசாரணைக்காக சிவசங்கர் மீண்டும் ஆஜராக உள்ள நிலையில், விசாரணை நடத்த டெல்லி, ஐதராபாத்தில் இருந்து என்ஐஏ அதிகாரிகள் கொச்சி வந்துள்ளனர். முதலில் சுங்க இலாகா, என்ஐஏவிடம் அளித்த பதில்களில் இருக்கும் முரண்பாடுகள் குறித்து சிவசங்கரிடம் விளக்கம் கேட்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய, சொப்னா, சரித்குமார், சந்தீப் நாயர் உள்பட அனைவரிடம் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் என்ஐஏ அதிகாரிகள் மிக நீண்ட கேள்விகள் அடங்கிய பட்டியலை தயாரித்து உள்ளனர். இந்த விசாரணை முடிவில் அவர் சுங்க இலாகா பதிவு செய்த வழக்கில் குற்றவாளி ஆவாரா? அல்லது என்ஐஏ பதிவு செய்துள்ள வழக்கில் குற்றவாளி ஆவாரா? என்பது தெரியவரும். மேலும், இன்றைய விசாரணைக்கு பிறகு சிவசங்கர் கைதானால், அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…
திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில்…