கேரள தங்கக் கடத்தல் வழக்கு – ஸ்வப்னாவின் என்.ஐ.ஏ காவல் நீட்டிப்பு
கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னாவின் என்.ஐ.ஏ காவல் மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு வந்த பார்சலை ஆய்வு செய்தனர். அதில் சுமார் ரூ. 15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வழக்கில் தலைமறைவான ஸ்வப்னா பெங்களூரில் இருப்பதாக என்ஐஏவிற்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் அவரையும், சந்தீப் நாயரை கைது கைது செய்தனர் .
இதைத்தொடர்ந்து, கொச்சியில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயரை என்ஐஏ அதிகாரிகள் ஆஜர்ப்படுத்தினர். அப்பொழுது ,ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயரை 21 ஆம் தேதி வரை என்ஐஏ காவலில் விசாரிக்க அனுமதி அளித்தது. இந்நிலையில் இன்றுடன் ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயருக்கு காவல் முடிவடைந்த நிலையில் என்ஐஏ கோரிக்கையை ஏற்று 3 நாள் காவல் விதிக்கப்படுவதாக என்ஐஏ நீதிமன்றம் தெரிவித்துள்ளது.