30 கிலோ தங்கம் கடத்தல் வழக்கு.! மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அதிரடி சஸ்பெண்ட்.!
கேரளாவில் 30 கிலோ தங்கம் கடத்தல் வழக்கில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி எம்.சிவசங்கர் சஸ்பெண்ட் செய்ப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட வழக்கு தற்போது அடுத்தடுத்த பல அதிரடி திருப்பங்களை சந்தித்து வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே ஸ்வப்னா சுரேஷ், மற்றும் சரித் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை வட்டத்திற்குள் சிக்கியுள்ளனர்.
தற்போது மூத்த ஐஏஎஸ் அதிகாரியான எம்.சிவசங்கரும் இதில் சிக்கியுள்ளார். இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், ‘ தலைமை செயலாளர் விஸ்வாஸ் மேத்தா தலைமையில் உயர்மட்டக்குழுவானது, இந்த வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரித்து மூன்று நாள்களில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது.
அந்த அறிக்கையானது இன்று மாலை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கர் விதிகளை மீறியதாக அந்த குழு கூறிஇருந்தது. இதனை தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.’ என கேரள முதல்வர் தெரிவித்துள்ளார்.
தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் சுமார் ஒன்பது மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.