கேரள தங்க கடத்தல் வழக்கு – ஸ்வப்னா, சந்திப் இருவரையும் என்ஐஏ காவலில் விசாரிக்க அனுமதி

Published by
Venu

கேரள தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள ஸ்வப்னாவை வருகின்ற 21-ஆம் தேதி வரை  காவலில் எடுக்க என்ஐஏ -வுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு வந்த பார்சலை ஆய்வு செய்தபோது அதில் சுமார் ரூ. 15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த  தங்க கடத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷ்க்கும், சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

மேலும், இந்த தங்கக் கடத்தல் தொடர்பாக 4 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில்  தலைமறைவான ஸ்வப்னா பெங்களூரில் இருப்பதாக என்ஐஏவிற்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு  அங்கு சென்ற என்ஐஏ அதிகாரிகள் அவரையும், சந்தீப் நாயரை கைது கைது நேற்று பிற்பகல் கேரளாவிற்கு கொண்டு வந்தனர்.

இதைத்தொடர்ந்து, கொச்சியில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் ஸ்வப்னாவை என்ஐஏ அதிகாரிகள் ஆஜர்ப்படுத்தினர். பின்னர், நீதிமன்றம் ஸ்வப்னாவை  14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்திரவிடப்பட்டது.கர்நாடகாவில் இருந்து கேரளா வந்ததால் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. இதனால் திருச்சூரில் உள்ள கொரோனா நல மையத்தில் அவர்களை போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டனர்.

பரிசோதனை முடிவுகள் வந்ததும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. சோதனை முடிவில் நெகட்டிவ் என தெரிய வந்ததால் அவர்களை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ சார்பில் மனுத் தாக்கல் செய்யப்படும் என கூறப்பட்ட நிலையில்,  தற்போது ஸ்வப்னாவை 10 நாள்கள் காவலில் எடுக்க என்ஐஏ மனு தாக்கல் செய்தது.இந்நிலையில் இந்த வழக்கில் ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயரை வருகின்ற 21-ஆம் தேதி வரை என்ஐஏ காவலில் விசாரிக்க அனுமதி அளித்துள்ளது நீதிமன்றம்.

Published by
Venu

Recent Posts

டெல்லியில் வெற்றி பெறுமா பாஜக? வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு!

டெல்லியில் வெற்றி பெறுமா பாஜக? வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு!

டெல்லி :  மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே…

22 minutes ago

INDvENG : அணியை அறிவித்த இங்கிலாந்து! 15 மாதங்களுக்கு பிறகு களமிறங்கும் ஜோ ரூட்!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை முதல்…

1 hour ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், டெல்லி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவு நிறைவு!

டெல்லி :டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத்…

2 hours ago

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை : “இக்கொடுரமானச் செயலுக்கு திமுக தான் பொறுப்பு” – இபிஎஸ் காட்டம்!

கிருஷ்ணகிரி : மாவட்டத்தில் 8ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக வெளியான அதிர்ச்சி தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசுப்பள்ளி ஆசிரியர்கள்…

3 hours ago

பழைய ‘கிங்’ கோலியாக மீண்டு(ம்) வாங்க., ஐடியா கொடுத்த அஸ்வின்!

நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி நாளை முதல் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3…

3 hours ago

“இவங்க செஞ்ச சம்பவம் தனி வரலாறு”..ஐசிசி பட்டியலில் முன்னேறிய அபிஷேக், வருண்!

டெல்லி : நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்களான அபிஷேக் சர்மா, வருண்…

4 hours ago