கேரள தங்கக்கடத்தல் வழக்கு ! காணாமல் போன காவலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
கேரள தங்கக்கடத்தல் வழக்கில் காணாமல் போன காவலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளார்.
கேரள மாநில திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்திய சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான முன்னாள் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை 9 நாள் காவலில் எடுத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தில் பணியாற்றிய துப்பாக்கி ஏந்திய காவலர் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது.மேலும் காணாமல் போன காவலர் ஜெயகோஷ் ஜெய்சங்கர் மற்றும் ஸ்வப்னாவிடம் பேசியதாக கூறப்படுகிறது. எனவே காவலர் ஜெய்சங்கர் கடத்தலா? தலைமறைவா? என்று விசாரணை தீவிரமானது.
இதனிடையே காணாமல் போன காவலர் வீட்டின் அருகே மயக்க நிலையில் காவல்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அவரது வீட்டில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் இருந்ததாகவும் காவல்த்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கையில் காயம் இருந்த நிலையில் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும் ஜெயகோஷ் தனது மணிக்கட்டை அறுத்து தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்று காவல்த்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.