கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் விவகாரத்தில் மீண்டும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் வந்த பார்சலில் ரூ. 15 கோடி மதிப்பிலான 30கிலோ தங்கட்டிகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த தங்கம் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சரித், சந்தீப் நாயர் மற்றும் பைசல் பேரத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தேசிய புலனாய்வு நிறுவனம்(என்ஐஏ) மற்றும் சுங்கத்துறையால் நடத்தி வரும் விசாரணையில் 150கிலோ தங்கத்திற்கு மேல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனிடையே ஸ்வப்னா சுரேஷ் மூன்று முறை ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்து அதனை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்றைய தினம் இந்த வழக்கு தொடர்பாக முகமது அன்வர், ஹம்சத் அப்துல் சலாம், சம்ஜுமற்றும் அம்ஜித் அலி ஆகியோர் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதுடன், இவர்களுக்கு சொந்தமான இடங்களான கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள 6 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டதில் பல முக்கிய ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை இந்த வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…