கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக கைதான ஸ்வப்னா உள்ளிட்டோரை விசாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு ஒரு பார்சல் வந்துள்ளது. எனவே தூதரக முகவரியை வைத்து தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்த நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள பார்சல்களை ஆய்வு செய்த போது சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கம் இருந்துள்ளது.
இந்த கடத்தல் வழக்கில் கேரள தகவல் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷ்,சந்தீப் நாயர் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. அதுமட்டுமின்றி, தூதரகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றிய சரித் பணியில் இருந்து நீக்கப்பட்டார் .இதனையடுத்து சரித் கைது செய்யப்பட்டார்.ஆனால் ஸ்வப்னா, கேரள அரசின் முதன்மை செயலர் மற்றும் தகவல் தொடர்பு துறைக்கும் செயலர் சிவசங்கருக்கு நெருக்கமானவர் என்று கூறப்பட்டது.இதன்காரணமாக, எம்.சிவசங்கரின் பதவி பறிக்கப்பட்டது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் தலைமறைவாகி இருந்தனர்.ஆனால் பெங்களூருவில் வைத்து ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் மற்றும் மற்றொருவரையும் மத்திய புலனாய்வு குழு கைது செய்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் என்ஐஏ அலுவலகத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .மேலும் புலனாய்வு அமைப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…