கேரள தங்க கடத்தல் வழக்கு: அன்வர், அப்துல் மற்றும் ஜிப்சாலுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு.!
கேரள தங்க கடத்தல் வழக்கில் அன்வர், அப்துல் மற்றும் ஜிப்சாலுக்கு ஜாமீன் வழங்கி கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் கேரள தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக ஸ்வப்னா சுரேஷை, என்.ஐ.ஏ. அதிகாரிகள் பெங்களூருவில் வைத்து கைது செய்யப்பட்டனர். ஸ்வப்னா சுரேஷ், திரிச்சூர் மாவட்டத்தின் விய்யூரில் உள்ள மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். பின்னர் நெஞ்சிவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தங்க கடத்தல் வழக்கில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே, என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த மாதம் முகமது அன்வர், ஹம்சத் அப்துல் சலாம், சம்ஜு மற்றும் அம்ஜத் அலி ஆகியோரை கைது செய்து, இவர்களுக்கு சொந்தமான 6 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி, பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்நிலையில், சுங்கத்துறை தொடர்ந்த வழக்கில், அன்வர், அப்துல் மற்றும் ஜிப்சாலுக்கு ஜாமீன் வழங்கி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.