கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் மருதமோன்பள்ளி சாலையில் ஒயூர் பகுதியில் சாரா ரெஜி எனும் 6 வயது சிறுமி நேற்று மாலை சில மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். மாலை வழக்கம் போல தான் செல்லும் டியூசனுக்கு அந்த சிறுமி, தனது 8 வயது சக மாணவனுடன் சென்றுள்ளார்.
அப்போது வெள்ளை நிற மாருதி டிசையர் காரில் வந்த ஒரு கும்பல் சிறுமியை மாலை 4.45 மணி அளவில் கடத்தியுள்ளது. அதனை 8 வயது சிறுவன் தடுக்க முற்பட்டுள்ளான். ஆனால் அந்த கும்பல் சிறுவனை தள்ளிவிட்டு சிறுமியை கடத்தி சென்றுள்ளனர். தகவல் அறிந்து உடனடியாக வந்த கொல்லம் மாவட்ட காவல்துறையினர் சோதனையை தீவிரப்படுத்தினர். இதற்கிடையில் அந்த சிறுமியின் தாயாரிடம் அந்த கும்பல் 10 லட்ச ரூபாய் தொகை கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுரங்கத்திற்குள்ளே ‘மினி’ மருத்துவமனை.. வேகெமெடுக்கும் மீட்பு பணிகள்.!
8 வயது சிறுவன் கூறிய அடையாளங்களை கொண்டும், சிசிடிவி காட்சிகள் கொண்டும், அந்த கும்பலில் ஒரு பெண் இருந்ததும், கார் விவரங்களையும் கொண்டு தேட ஆரம்பித்தது. அதில், இன்று அதிகாலை 6.30 மணியளவில் ஸ்ரீகண்டேஸ்வரம் பகுதியில் கார் வாஷிங் நிலையத்தில் ஒரு பையில் 500 ரூபாய் கட்டுகள் 19 எண்ணம் அதாவது 7.50 லட்ச ருபாய் இருந்துள்ளது. இதனை அடுத்து சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் தான், ஒயூர் பகுதியில் உள்ள ஒரு ஆசிரமத்தில் கடத்தப்பட்ட சிறுமி நின்று கொண்டு இருப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக ஆசிரம மைதானத்திற்கு சென்ற போலீசார் அந்த சிறுமியை மீட்டனர். தற்போது அந்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு சிறுமியின் பெற்றோரிடத்தில் அனுப்பி வைக்கப்படுவார் என கூறப்பட்டுள்ளது.
இதுவரை 3 பேர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 2 பேர் விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். கிடைக்கப்பெற்ற தகவல்களை கொண்டும், மர்ம நபர்களின் ஸ்கெட்ச் வரைபடத்தை கொண்டும் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…