கேரளாவுக்கு “கரம்” நீட்டிய “பள்ளி மாணவர்கள்”வழங்கிய தொகை 2 கோடி…!!மனதை தொட்ட மாணவர்கள்..!!
வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளவுக்கு நாடு முழுவதும் உதவிகள் குவிந்தது.370 பேர் இறந்துள்ளதாகவும், சுமார் 8.5 லட்சம் பேர் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இதுவரை பள்ளி மாணவர்கள் மட்டும் சுமார் 2 கோடி நிவாரண நிதி வழங்கியுள்ளதாக தொழில்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கேரள முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்கு பள்ளி மாணவர்கள் 2 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி இருப்பதாக, அம்மாநில தொழில்துறை அமைச்சர் ஜெயராஜன் தெரிவித்தார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மாநிலத்தில் இரண்டாயிரம் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் இருந்து நிவாரண நிதியாக 2 கோடியே 5 லட்சம் ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது என்றார். நன்கொடை வசூலிப்பதில் மாணவர்கள், ஆசிரியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருந்ததாகத் தெரிவித்தார்.
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் தன் வாங்க சைக்கிள் வைத்திருந்த பணத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கிய சிவசண்முகம்-லலிதா தம்பதியின் 8-வயது மகள் அனுப்பிரியா, தான் சேமித்து வைத்திருந்த ரூ.8000 பணத்தை நிவாரண நிதியாக வழங்கினார்.
இவரின் இந்த நற்செயலை பாராட்டி அவருக்கு ஹீரோ சைக்கிள் நிர்வாகமே சிறுமி விரும்பிய சைக்கிளை பரிசளித்தோடு மட்டுமல்லாமல் வருடத்திற்கு ஒரு சைக்கிள் வழங்கப் படும் என்று அறிவித்தது நிர்வாகம்.
மேலும் தனது புற்றுநோய் சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை கேரள வெள்ள நிதிக்கு அளித்த சிறுமி என்று எத்தனை பிஞ்சுகளின் உதவி கண்டவர்களின் மனதை தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.ஆறு அடி வளர்ந்த மனிதனுக்கு இல்லாத பக்குவம் ஆறு வயது பிஞ்சுகளிடம் இருந்து கற்று கொள்ள வைக்கிறது இயற்கை.
DINASUVADU