கேரளாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரசின் 2 வது அலை மிகுந்த பேரழிவை ஏற்படுத்தி வந்தது, மேலும் உயிரிழப்புகளை தவிர்க்க கேரள அரசு ஊரடங்கை அமல்படுத்தி கொரோனா தொற்று தாக்கத்தை படிப்படியாக குறைத்துள்ளது.
இதையடுத்து கேரளா அரசு நேற்று மாநில அளவிலான ஊரடங்கை ஜூன் 16 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. தற்போது கொரோனா தொற்று பரவல் எதிர்பார்த்தபடி குறையாததால் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜூன் 12 (சனிக்கிழமை) மற்றும் ஜூன் 13 (ஞாயிறு) ஆகிய நாட்களில் முழுமையான ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. தற்போதுள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் அத்தியாவசிய கடைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு ஜூன் 16 வரை தொடர்ந்து இருக்கும் என்றும் அறிவித்துள்ளது.
அதாவது அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள், தொழில்களுக்கான மூலப்பொருட்கள் (பேக்கேஜிங் உட்பட), கட்டுமானப் பொருட்கள் மற்றும் வங்கிகள் இப்போது செயல்படுவதைப்போல் தொடர்ந்து செயல்படும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…
டெல்லி : நேற்று (ஏப்ரல் 22) பிற்பகல் 3 மணியளவில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…