சபரிமலை விவகாரம்…!தேவையற்ற பீதியை பரப்புவோர் மீது வழக்கு பதிவு செய்யு கேரள டிஜிபி உத்தரவு …!
சபரிமலை விவகாரம் குறித்து தேவையற்ற பீதியை பரப்புவோர் மீது வழக்கு பதிவு செய்யு கேரள டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி கேரளா மாநில சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை செயல்படுத்துவதற்கு இந்து அமைப்புகளும், ஐயப்ப பக்தர்கள் சங்கமும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. தமிழகம், கேரளத்தில் பல்வேறு பகுதிகளில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றது.
இந்நிலையில் சபரிமலை விவகாரம் குறித்து தேவையற்ற பீதியை வாட்ஸ் ஆப் & முகநூலில் பரப்புவோர் மீது வழக்கு பதிவு செய்யுமாறு சைபர் செல் பிரிவிற்கு கேரள டிஜிபி மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.