கேரளாவில் மேலும் 91 பேருக்கு கொரோனா உறுதி.! இன்று மட்டுமே 34 பேர் குணமடைந்துள்ளனர்.!

கேரளாவில் இன்று மட்டும் 91 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது 2096-ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வந்த கேரளாவில் தற்போது கொரோனா தொற்று சற்று அதிகமாக பரவி வருகிறது. இன்று மட்டுமே 91 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால், கேரளாவில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கையானது 2096ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டுமே 34 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடுதிரும்பியுள்ளனர். இதுவரை 848 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடுதிரும்பியுள்ளனர். தற்போதுவரையில் கேரளாவில் கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையானது 1231 ஆக உள்ளது.
இன்று பாதிக்கப்பட்டவர்களில் 53 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் எனவும், 27 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025