தலைவர் தேர்தலில் போட்டி.. மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கேரள காங்கிரஸ் ஆதரவு!
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கேரள காங்கிரஸ் ஆதரவு என தகவல்.
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கேரள காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கேஎன் திரிபாதியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
எனவே, அக்.8-ஆம் தேதிக்குள் இருவரும் வாபஸ் பெறவில்லை என்றால், அக்.17ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்பி சசிதரூர் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நிலையில், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஆதரவு என கேரள காங்கிரஸ் அறிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கேவை கேரளா காங்கிரஸ் ஆதரிக்கும் என மாநில தலைவர் கே.சுதாகரன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, சசிதரூர் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் அதிருப்தி குழுவான ஜி23 தலைவர்களும் அவரை மறுப்பதாக தெரிவித்திருந்தது. எனவே, சொந்த மாநிலமான சசிதரூரை ஆதரிக்காததால் கார்கேவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஜனநாயகத்தை நிலைநாட்டவே காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக சசிதரூர் மீண்டும் விளக்கமளித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் நிலவுவது நட்பு ரீதியிலான போட்டி மட்டுமே, கார்கே மற்றும் தமக்கு இடையே நேரடி போட்டி நிலவுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் சசிதரூர் தெரிவித்துள்ளார்.