கொரோனா முன்னெச்சரிக்கையாக வீடுகளில் தனிமைப்படுத்தி உள்ளவர்களை கண்காணிக்க சிறப்பு மோட்டார் சைக்கிள் போலீஸ் படை உருவாக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
கேரளாவில் ஒற்றை எண்ணிக்கையில் இருந்த கொரோனா தொற்று எண்ணிக்கையானது தற்போது இரட்டை இலக்கமாக மாறி வருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்தும், அதற்காக மேற்கொள்ளப்படும் நவடிக்கைகள் குறித்தும் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், கேரளாவில் இன்று மட்டுமே 16 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பபடைத்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 576ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு 80 பேர் கேரளாவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி கொண்டு வருகிறது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தபட்டுள்ளவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். அவர்கள் வீட்டை விட்டு வெளியே வர கூடாது. இவர்களை கண்காணிக்க சிறப்பு மோட்டார் சைக்கிள் போலீஸ் படை உருவாக்கப்படும் எனவும், கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…