கேரள அரசின் தலைமை செயலகத்தில் இன்று மாலை தீ விபத்து ஏற்பட்டது. இது எதிர்பாராமல் நடந்த விபத்து அல்ல, திட்டமிட்ட நடத்தப்பட்டது என காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டம் நடத்தினர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள அரசின் தலைமை செயலகத்தில் இன்று மாலை தீ விபத்து ஏற்பட்டது. இவை சிறிய தீ விபத்து என்பதால் அங்குள்ள தீயணைப்பு கருவிகளை கொண்டு தீ அணைக்கப்பட்டது. இருந்தாலும், சில ஆவணங்கள் ஏறிந்து போனதாக கூறப்படுகிறது.
அலுவலகத்தில் உள்ள ஏசி பழுதடைந்து அதில் ஏற்பட்ட மின்கசிவு காரணத்தால் அதிலிருந்து தீ பற்றிக்கொண்டது என தலைமை செயலர் விஷ்வா மேக்தா விளக்கமளித்தார்.
இந்நிலையில் இது எதிர்பாராமல் நடந்த விபத்து அல்ல அது திட்டமிட்ட நடத்தப்பட்டது என காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டை முன்வைத்தனர். மேலும் இதுதொடர்பாக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ரமேஷ்சென்னிதாலா நிகழ்விடத்திற்கு வந்து, தங்க கடத்தல் ஆவணங்களை அழிப்பதற்காக தீ வைக்கப்பட்டுள்ளது என கேரள அரசு மீது குற்றம் சாட்டி, மேலும், இந்த தீ விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டது எனவும் கூறினார்.
பத்திரிகையாளர்களையும் சட்ட சபை உறுப்பினர்களையும் தலைமை அலுவலகத்திற்குள் அனுமதிக்காதது ஏன் எனவும் கூறி எதிர்கட்சியினருடன் சாலை மறியலில் ரமேஷ்சென்னிதாலா ஈடுபட்டார். காவல்துறையினர் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். கேரள அரசு தரப்பில் அமைச்சர் இ .பி.ஜெயராஜ் கூறுகையில், ‘ எதிர்பாராமல் ஏற்பட்ட தீ விபத்தை எதிர்க்கட்சியினர் திசை திருப்ப முயற்சிக்கின்றனர்.’ என குற்றம் சாட்டினார்.
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய…
டெல்லி : 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் இயற்றிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அரசு ஏற்றுக்கொண்டது.…
சென்னை : தீபாவளியையொட்டி, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அமரன்' திரைப்படம் வெற்றிகரமாக 4வது வாரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. சொல்லப்போனால், சிவகார்த்திகேயன்…
மும்பை : 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று கடந்த சனிக்கிழமை முடிவுகள் வெளியானது. இந்த முறையும்…
சென்னை : தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி இருக்கிறது. இது இலங்கைக்கு கீழே இருந்து…
சென்னை : சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாம் நாளாக கடும் சரிவைக் கண்டுள்ளது. கடந்த வாரம்…