பிரித்விராஜ்ஜின் டிவீட்டிற்கு ஆதரவு அளித்த கேரள முதல்வர்..!
லட்சதீவின் சீர்திருத்தங்களை எதிர்த்ததற்காக சைபர் தாக்குதலை சந்தித்த கேரள திரைப்பட நடிகர் பிரித்விராஜ் சுகுமாரனுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
லட்சத்தீவின் சீர்திருத்தத்திற்கு எதிராக ட்வீட் செய்த நடிகர் பிரித்விராஜ் மீது லட்சத்தீவின் வலது சாரிகள் சைபர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுகுறித்து சனிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், நடிகர் பிரித்விராஜ் வெளிப்படுத்திய உணர்வுகள் கேரள மக்களின் உணர்வு, பிரித்விராஜ் அதனை சரியாக வெளிப்படுத்தியுள்ளார் என்று அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
நடிகர் பிரித்விராஜ் அவரது டீவீட்டில், லச்சத்தீவின் நிர்வாகி ஏற்றுக்கொண்ட சீர்திருத்தங்கள் குறித்து லச்சத்தீவில் தனக்கு தெரிந்தவர்கள் ‘அவநம்பிக்கையிலான செய்திகளை’ அனுப்புகிறார்கள் என்றும் லச்சத்தீவில் நடக்கும் பிரச்சனைகளை பொதுமக்கள் கவனத்திற்கு கொண்டுவருமாறு மன்றாடுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பல நூற்றாண்டுகளுக்கு பழமையான குடியேற்றத்தின் வாழ்க்கை முறையை சீர்குலைப்பது எவ்வாறு அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய முன்னேற்ற வழிமுறையாகும்? என்றும் விளைவுகளை கருத்தில் கொள்ளாமல் தீவின் சுற்றுசூழல் அமைப்பின் சமநிலையை அச்சுறுத்துவது எவ்வாறு நிலையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும்? என்றும் கேட்டுள்ளார்.
#Lakshadweep pic.twitter.com/DTSlsKfjiv
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) May 24, 2021