கேரள முதலமைச்சர் பினராய் விஜயன்- ராகுல் காந்தி சந்திப்பு
கேரள முதலமைச்சர் பினராய் விஜயனை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி சந்தித்துள்ளார்.
தென் மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் கனமழை பெய்தது.கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் மழையின் தாக்கம் அதிகரித்தது.இதனால் 8-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் சேதமடைந்தது.குறிப்பாக வயநாடு மாவட்டம் பெரும் சேதத்துக்கு உள்ளாகியது.இதனை காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி வெள்ளப்பாதிப்புகளை நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்த நிலையில் இன்று கேரள முதலமைச்சர் பினராய் விஜயனை ராகுல் காந்தி சந்தித்துள்ளார். கேரள வெள்ள நிவாரணம் மற்றும் புனரமைப்பு, பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசனை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.