கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ..4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் தென்மேற்கு மழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்த ஆண்டு மழை காரணமாக கேரளாவில் உள்ள 9 -க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கிய 59 பேரை காணவில்லை.மேலும் 34 பேர் காயமடைந்துள்ளனர்.கனமழை மற்றும் வெள்ளத்திற்கு 95 பேர் உயிரிழந்துள்ளனர்.ராணுவம், விமானப்படை, கடற்படை என அனைத்து படைகளும் தேடும் பணி மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது.
இதற்கு இடையில் திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகத்தில் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு பின்னர் பினராயி விஜயன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ..4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் .வீடு மற்றும் நிலங்களை இழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் .நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களின் குடும்பங்களுக்கு அவசர உதவியாக ரூ.10000 நிதி வழங்கப்படும்.மேலும் 15 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்றும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…
அமெரிக்கா : அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சியான ஃபாக்ஸ்…
டெல்லி : 47-வது அமெரிக்க அதிபர் தேர்தலானது நேற்று மாலை தொடங்கி, இன்று காலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத்…
சென்னை : இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரது இருசக்கர வாகன விருப்ப பட்டியலில் நீண்ட வருடங்களாக கோலோச்சி வருகிறது…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 6] எபிசோடில் சத்யாவை போலீஸிடம் இருந்து பாதுகாக்கிறார் முத்து.. சத்யாவை தேடும் போலிஸ்…