கேரளா முதலமைச்சர் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு .!
- குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில் பல மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
- கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து ஆலோசனை நடத்த வருகின்ற 29-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கொடுக்கப்பட்ட நிலையில், இந்த குடியுரிமை சட்ட திருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் மத்திய பாஜக அரசை கண்டித்தும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து ஆலோசனை நடத்த வருகின்ற 29-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி சமூக அமைப்புகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 16-ம் தேதி குடியுரிமை சட்டத்தையும் எதிர்த்து கேரளாவில் ஆளும் சிபிஎம் கட்சியும், எதிர்கட்சியான காங்கிரஸ் இணைந்து போராட்டம் நடத்தினர். மத்திய அரசுக்கு எதிராக ஆளுங்கட்சியும் , எதிர்கட்சியும் சேர்ந்து போராட்டம் நடத்துவதை பார்த்து மாற்ற மாநிலங்கள் வியந்து பார்த்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.