கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் ராஜினாமா!!
கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தனது ராஜினாமா கடித்தை அம்மாநில ஆளுநரிடம் அளித்துள்ளார்.
கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே கேரளாவில் இடதுசாரி கூட்டணிகள் அதிகளவிலான இடங்களில் முன்னணி வகித்த நிலையில், 99 இடங்களில் 81 தொகுதிகளில் இடதுசாரியினர் வெற்றி பெற்றுள்ளனர்.
இதனால் தொடர்ந்து 2-வது முறையாக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள பினராயி விஜயனுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கேரளாவில் பல ஆண்டுகளுக்கு பிறகு கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து 2ம் முறையாக ஆட்சியை பிடித்து, வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமதுவிடம் அளித்துள்ளார். மேலும், இரண்டாவது முறையாக கேரளாவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பிரனாயி விஜயன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.