கேரள முதல்வர் பினராயி விஜயன், மாநில உரிமைகளை காப்பதில் சிங்கம் போல் செயல்படுகிறார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்.
கேரள மாநிலம் கண்ணூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான உறவு குறித்து உரையாட உள்ள நிலையில், இந்த மாநாட்டை கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரளாவில் நடைபெறும் மாநில சுயாட்சி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் உரையை தொடங்கினார். தமிழக முதல்வரின் மலையாளப் பேச்சுக்கு அரங்கில் இருந்தவர்கள் கரவோசை எழுப்பி மகிழ்ந்தனர்.
பின் பேசிய அவர், தமிழகத்திற்கும், கேரளத்திற்கும் இடையேயான உறவு என்பது சங்க காலம் முதல் உள்ளது. திராவிட மற்றும் கம்யூனிஸ்ட் உறவு என்பது 80 ஆண்டுகள் வரலாறு கொண்டது. கேரள முதல்வர் பினராயி விஜயன், மாநில உரிமைகளை காப்பதில் சிங்கம் போல் செயல்படுகிறார். எனக்கு வழிகாட்டும் முதல்வராக பினராயி விஜயன் திகழ்கிறார்.
வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்தியாவில் ஒற்றை தன்மையை உருவாக்க முயற்சி ஆங்கிலேயர்கள் செய்ய நினைக்காததை கூட பாஜக செய்ய முயல்கிறது ஒரே நாடு, ஒரே கல்வி, ஒரே மதம், ஒரே கட்சி என மாற்ற பாஜக முயல்கிறது.
இந்தியாவை காப்பாற்ற வேண்டுமெனில் முதலில் மாநிலங்கள் காப்பாற்றப்பட வேண்டும். மாநிலங்கள் காப்பாற்றப்பட்டால்தான் இந்தியா காப்பாற்றப்படும். மாநிலங்களை ஒருங்கிணைத்து நாம் போராட வேண்டும். போராட தயாராக இருக்க வேண்டும்.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…