உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற நிலையில் , தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் கேரள தலைமை தேர்தல் அதிகாரி டீக்கா ராம் மீனா (Teeka Ram Meena )வாக்களிக்க முடியவில்லை.
இடுக்கி,திருவனந்தபுரம்,கொல்லம், பத்தனம்திட்டை, ஆலப்புழை ஆகிய மாவட்டங்களில் தேர்தல் நேற்று நடைபெற்றது.இந்த 5 மாவட்டங்களில் 395 உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 6911 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. கொரோனா கட்டுப்பாடு விதிகள் உள்ளாட்சி தேர்தலில் முறையாக பின்பற்றப்படும் என்றும் வாக்காளர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து,சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் கேரள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தப்பட்டது.
இதனையடுத்து 2வது கட்ட தேர்தல் வரும் 10-ஆம் தேதியும், 3வது கட்ட தேர்தல் 14-ஆம் தேதியும் நடைபெறுகிறது.ஆனால் தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் கேரள தலைமை தேர்தல் அதிகாரி டீக்கா ராம் மீனா (Teeka Ram Meena )வாக்களிக்க முடியவில்லை.இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனால் உள்ளாட்சித் தேர்தலில் அவர் ஓட்டுப் போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தனது பெயர் இடம்பெறாத நிலையில் உடனடியாக திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியரிடம் விவரத்தைக் கூறினார். ஆனால் மாவட்ட ஆட்சியர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் முடிந்து விட்டது என்றும் கூறினார்.இதனால் வாக்களிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…