களமசேரி குண்டுவெடிப்பில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரியில் கிறிஸ்தவ வழிபாட்டுத் தளத்தில் இன்று காலை பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாகவும், 30-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், களமசேரி குண்டுவெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது. குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த குமாரி என்பவர் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக” வெடிகுண்டு வைத்தது நான் தான்’ என்று ஃபேஸ்புக்கில் வீடியோ மூலம் கொச்சியை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் பொறுப்பேற்றார். திருச்சூரில் உள்ள கொடகரா காவல் நிலையத்தில் டொமினிக் மார்ட்டின் சரணடைந்துள்ளார். சரணடைவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்பு ஃபேஸ்புக்கில் லைவ் வீடியோ ஒன்றை டொமினிக் மார்ட்டின் வெளியிட்டார்.
அந்த வீடியோவை பதிவிட்டு பின்னர் தான் போலீசில் சரணடைந்தார். வீடியோ வெளியானதை தொடர்ந்து டொமினிக் மார்ட்டின் பேஸ்புக் கணக்கு நீக்கப்பட்டது. அதே சமயம், டொமினிக் மார்ட்டின் அளித்த ஆதாரங்களை போலீசார் ஆய்வு செய்து வருவதாகவும், தற்போது இதுபற்றி கூற முடியாது என்றும் தற்போது டொமினிக்கிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சரணடைந்த டொமினிக் மார்ட்டினிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் "விடுதலை 2" படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'தினம்…