கேரள விமான விபத்து: ஒரு குழந்தை உட்பட பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு.!?
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை இயக்கிய 2 விமானிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், தற்போது ஒரு குழந்தை உட்பட பலி எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமானது, தரையிறங்கும்போது ஓடுபாதையில் நிற்காமல் சறுக்கி கொண்டு சென்று விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானம் இரண்டாக உடைந்தது. இவ்விமானத்தில் 2 விமானிகள், 6 விமான பணிப்பெண்கள், 10 கைக்குழந்தைகள் உட்பட 191 பேர் பயணம் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விமானத்தை இயக்கிய 2 விமானிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், தற்போது ஒரு குழந்தை உட்பட பலி எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.