கேரள விமான விபத்து மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த 10 பேருக்கு கொரோனா.! 80 பேர் தனிமை.!
கேரள விமான விபத்தில் மீட்பு பணியில் ஈடுப்பட்ட உள்ளூர்வாசிகள் 10 பேருக்கு கொரோனா உறுதியாகியள்ளதாம்.
கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். இந்த விமான விபத்தில் மீட்கப்பட்டவர்களில் சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த மீட்பு படையினர் மற்றும் தன்னார்வலர்களை தனிமடுத்திக்கொள்ள மருத்துவர்கள், அதிகாரிகள் அறிவுறுத்தினார்.
இந்நிலையில், மீட்பு பணியில் ஈடுப்பட்ட உள்ளூர்வாசிகள் 10 பேருக்கு கொரோனா உறுதியாகியள்ளதாம். 80 பேர் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே மீட்பு பணியில் ஈடுபட்ட 23 அரசு உயர் அதிகாரிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அந்த குறிப்பிட்ட அரசு அதிகரிகளுடன் தொடர்பில் இருந்த அரசு அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.