தம்பி இது தீர்வு இல்லை…தற்கொலை செய்ய முயற்சி செய்த இளைஞர்..போலீசாரின் செயல்?
ஃபரூக் புதி பாலத்தின் உச்சியில் இருந்து தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞன் மராட் காவல் துறை காப்பாற்றியுள்ளது.

கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்த அந்த இளைஞர், உணர்ச்சிவசப்பட்ட நிலையில், தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் முடிவுக்கு வந்து, பாலத்தின் உயரமான பகுதியில் நின்று மிரட்டல் விடுத்தார்.
இந்த தகவல் உடனடியாக பொன்னானி மற்றும் மாறாடு காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அந்த இடத்திற்கு மாறாடு காவல்துறையினர் விரைந்து சென்று இளைஞரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஒரு காவல் அதிகாரி தம்பி தற்கொலை தீர்வு அல்ல என அட்வைஸ் செய்தார். அவருக்கு வாழ்க்கையின் மதிப்பையும், எதிர்காலத்தில் நம்பிக்கையுடன் முன்னேறுவதற்கான வழிகளையும் எடுத்துரைத்தனர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இளைஞர் தனது முடிவை மாற்றிக்கொண்டு, காவல்துறையினரின் உதவியுடன் பாதுகாப்பாக பாலத்திலிருந்து கீழே இறக்கப்பட்டார்.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வாக இருக்க முடியாது என்பதை வலியுறுத்திய காவல்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும், மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணம் உள்ளவர்கள் உடனடியாக உதவி மையங்களை அணுக வேண்டும் என்றும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்.
நண்பர்கள் மற்றும் சமூகம் ஒருவரின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்களை கவனித்து, தேவைப்படும்போது ஆதரவு அளிப்பது முக்கியம். பொன்னானியில் நடந்த இந்த சம்பவம், ஒரு இளைஞரின் வாழ்க்கையை காப்பாற்றியதோடு, மனிதாபிமானம் மற்றும் ஒற்றுமையின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது. இருப்பினும் அவர் என்ன காரணத்துக்காக தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தார் என்கிற விவரம் வெளியாகவில்லை. மேலும், தற்கொலை எண்ணம் உள்ளவர்கள் திஷா ஹெல்ப்லைன் (1056) அல்லது டெலி மனாஸ் ஹெல்ப்லைனை (14416) தொடர்பு கொள்ள வேண்டும்.
View this post on Instagram