கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவன் அர்ஷாத் சைக்கிள் மாடலில் ஒரு புதிய பைக்கை கண்டுபிடித்து உள்ளான்.
தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளது. இதனால், வீட்டில் இருக்கும் மாணவர்கள் பலர் தங்களுக்கு ஆர்வமான துறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவனான அர்ஷத் ஒரு புதிய கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளார். அதுவும் கடந்த ஒன்றரை மாதத்தில்.!
அர்ஷாத் தந்தை அதே பகுதியில் பைக் ஒர்க் ஷாப் வைத்துள்ளார். அங்கு கிடைக்கும் பொருள்களை கொண்டு அர்ஷாத் கடந்த ஒன்றரை மாதமாக ஒரு சைக்கிளை பைக்-ஆக மாற்றி வடிவமைத்துள்ளார். அந்த பைக்கில் ஒரு லிட்டர் பெட்ரோல் ஊற்றினால் 50 கிலோமீட்டர் வரை செல்லும் என அவரே குறிப்பிடுகிறார். அந்த சைக்கிளில் பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. எல்இடி பல்புகள், இன்ஜின் என தேவையான அனைத்தும் பொருத்தப்பட்டுள்ளது. இதற்காக அர்ஷத் பத்தாயிரம் ரூபாய் வரையில் செலவு செய்துள்ளாராம்.
மும்பை : இந்தியாவில் பல இடங்களில் சையத் முஷ்டாக் அலி டிராபி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணியின் மூத்த…
சென்னை : ஐயா விடாமுயற்சி அப்டேட் கொடுங்க என அஜித் ரசிகர்கள் அந்த படத்தின் அப்டேட்டை தினமும் தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டு வருகிறார்கள்.…
வாஷிங்டன் : அமெரிக்காவில் சூரிய மின்சக்தித் திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது பல…
உத்திரபிரதேசம் : மாநிலத்தில் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி ஒன்று இருக்கிறது. ஆனால், இந்த மசூதி இங்கு இருப்பதற்கு முன்னதாக…
சென்னை : தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் வானகரத்தில்…
சென்னை : அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் திருநாள் அன்று சிஏ பவுண்டேஷன் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய…