கேரளாவில் இடதுசாரி கூட்டணி கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்று தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியைக் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.
கேரளாவில்,கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி 99 தொகுதிகளில் வெற்றி பெற்றது,இதனையடுத்து பினராயி விஜயன் முதல்வரானார்.அதே சமயம், காங்கிரஸ் கூட்டணி 41 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.ஆனால், பாஜகவுக்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்கவில்லை.
இந்த நிலையில்,கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது நேற்று நடைபெற்றது. இதில், கேரளாவில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் இடதுசாரி கூட்டணி கட்சியானது 99 இடங்களில் வெற்றி பெற்று,தொடர்ந்து 2வது முறையாக கேரளாவில் ஆட்சியைப் பிடித்துள்ளது.இதனால்,மீண்டும் பினராயி விஜயன் முதல்வர் பொறுப்பை ஏற்க உள்ளார்.இதனையடுத்து,பினராயி விஜயனுக்கு பல்வேறு கட்சித்தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கேரளாவில்,கடந்த 40 ஆண்டுகளாக இடதுசாரி கட்சிகளும்,காங்கிரஸ் கூட்டணியும் மாறி மாறி ஆட்சி அமைத்து வந்தன.இந்நிலையில்,தற்போது தொடர்ந்து 2 வது முறையாக இடதுசாரி கட்சிகள் ஆட்சியைப் பிடித்து வரலாற்று சாதனைப் படைத்துள்ளன.
மதுரை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், அரசியல் களத்தில் 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது.…
கட்டாக் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் இன்று…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா துறையில் மட்டுமல்ல தனக்கு விருப்பமான ரேஸிங் துறையிலும் மிகுந்த உத்வேகத்துடன் கலந்து கொண்டு…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…
சென்னை : மத்திய கல்வி கொள்கையின் PM Shri திட்டத்தில் தமிழ்நாடு இணைய வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து…