இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்தவர்கள் நேற்று திருவனந்தபுரத்தில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை (DYFI) சேர்ந்தவர்கள் மிதில் ராஜ் ( வயது 32), ஹக் முஹம்மது (வயது 24) .இவர்கள் நேற்று இரவு கேரள மாநிலம் உள்ள திருவனந்தபுரத்தில் உள்ள வெஞ்சராமூடு என்ற இடத்தில் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், இந்த கொடூரமான சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் வெஞ்சராமூடில் நடந்ததாக தெரிவித்துள்ளனர். மிதில் மற்றும் ஹக் பைக்கில் சென்றபோது அவர்களை மர்ம கும்பல் தடுத்து நிறுத்தி சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.மிதில் ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகவும்,மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது சிகிச்சைபலனின்றி ஹக் உயிரிழந்தார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து எஸ்.பி. அசோக் குமார் கூறுகையில்,கடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் இரு குழுக்களிடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதாக தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரட்டை கொலைக்கு பின்னால் காங்கிரஸ் இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…