மதுரையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி எனும் இடத்தில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு நாகரீகம் தோன்றியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. 2500 ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு கால்நடைகளை கொண்டு விவசாயம் செய்யப்பட்டு உள்ளது. ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டுகளும் இங்கு நடைபெற்றுள்ளது. அதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவ்வாறு தொல்லியல் துறை ஆராய்ச்சிகளின் முடிவு வெளியாகியுள்ளது.
இந்த கீழடி ஆராய்ச்சியானது 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் இந்த ஆராய்ச்சியில் கிடைக்கப்பற்ற பொருள்கள் சேகரிக்கப்பட்டு தமிழக தொல்லியல் துறையால் இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதனை அடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கீழடி ஆராய்ச்சி பற்றிய மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து அதனை கடிதமாக எழுதி மத்திய சுற்றுலாத்துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங்கிடம் திமுக சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில் உத்தரபிரதேசத்தில் சனகோவ்லி எனும் இடத்தில் இதேபோல் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது அந்த இடம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் கீழடி பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் எனவும், அடுத்ததாக குஜராத் மாநிலம் வாட் நகரில் இதேபோல தொல்லியல் ஆராய்ச்சி அங்கு நடைபெற்று அங்கு தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. அதேபோல தொல்லியல் துறை அருங்காட்சியகம் ஒன்று கீழடியில் அமைக்கப்பட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அதேபோல கீழடி அருகில் மதுரையில் தொல்லியல் துறை கிளை அலுவலகம் ஒன்று திறக்கப்படும் வேண்டும். என கோரிக்கைகள் அக்கடிதத்தில் இடம்பெற்றிருந்தன.
திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி.எம்பியும், கார்த்திக் சிதம்பரம்.எம்பியும் மற்றும் வெங்கடேசன்.எம்பியும் மத்திய சுற்றுலாத்துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் அவர்களிடம் நேரில் வழங்கினர்.
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…